November 22, 2024

சிவாஜிலிங்கம், ரவிகரன் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படைக்கு சுவீகரிக்க அளவீட்டுக்கு சென்றபொழுது நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை கடமைசெய்யவிடாமல் தடுத்து வாகனம் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழங்கு விசாரணை செவ்வாய்க்கிழமை 8 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இந்த வழங்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்போது குற்றசாட்டிற்கு உள்ளானவர்கள் சார்பாக மன்றில் பிரசன்னமாகியிருந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆயராகி இருந்தார்கள்.

சட்டத்தரணிகள் நீதவானிடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக தொடர்ச்சியாக வழங்கு தாக்கல் செய்யப்படாமல் சட்டமாஅதிபரிடம் இருந்து எதிர்பாக்கப்படுவதாக சொல்லப்படுவதை அடுத்து அழைப்பாணை அனுப்பப்பட்டால் மாத்திரம் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும் என்று நீதிபதியால் சொல்லப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் யூலை மாதம் 26 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert