இந்திய தூதரகத்திற்கு மதிப்பளித்தது முன்னணி!
வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் கூறியிருந்தார்.
ஆனால், கடலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் தற்போதும் இடம்பெறுகின்றது.
அத்தோடு இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் மோதவைக்கும் இராஜதந்திர முயற்சியா என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்கும் என இந்திய தூதரக அதிகாரி வாக்குறுதி வழங்கியதை தொடர்ந்து மீனவர்கள் தொடர்பான நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையை விலக்கிக்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது
இன்று நண்பகல் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, எம்மால் முன்னெடுக்கப்படவிருந்த விவாதம் தொடர்பில் கலந்துரையாடினார்.
மீனவர் பிரச்சினையானது யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் ஓர் நெருக்கடி மிகுந்த சிக்கல் நிலைக்கு வந்துள்ளதாகவும், அந்த நெருக்கடி நிலையை தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும், அந்த வகையில் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்குத் தாம் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் முகமாக குறித்த விடயத்தினை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையை தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுப்பதனைத் தவிர்த்துக் கொண்டுள்ளோம் முன்னணி அறிவித்துள்ளது.