ஊரடங்கு காலத்தில் மது விருந்து! மன்னிப்புக் கோரினார் போரிஸ் ஜோன்சன்
பிரித்தானியாவில் கொரோனா முடக்க நிலையில் காட்டுப்பாடுகளை மீறி, மது விருந்தில் கலந்து கொண்டதற்காக, பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டில் முழு அளவில் முடக்கநிலை அமலில் இருந்தபோது, லண்டன் டவுனிங் வீதியில் தனது அலுவலக தோட்டத்தில் நடைபெற்ற மது விருந்தில் போரிஸ் ஜோன்சன் கலந்துகொண்டார்.
ஊரடங்கு விதிகளை மீறி பிரதமரே இவ்வாறு செய்ததற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மன்னிப்புக் கோரிய போரிஸ் ஜோன்சன், விதிகளை உருவாக்குபவர்களே அதனை சரியாக பின்பற்றாதது குறித்து மக்கள் தன் மீதான கோபத்தை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.