November 23, 2024

பிரித்தானியாவும் இந்தியாவும் தமிழர்களின் முதுகில் குத்தவில்லை முகத்தில் அறைந்துள்ளன?

ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான நீதியைப் பூச்சியப்படுத்தும் பணியை ஒபாமாவின் அமெரிக்காவுக்குப் பின்னர் பிரித்தானியா தத்தெடுத்திருக்கிறது என்பது தற்போது அறுதியும் உறுதியுமாக நிரூபணமாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா தலைமையில் கனடா, ஜேர்மனி, மாலாவி, மசிடோனியா மற்றும் மொன்றிநீக்ரோ ஆகிய மேலும் ஐந்து நாடுகளை உள்ளடக்கிய கருக்குழு தனது பூச்சிய வரைபை வெள்ளிக்கிழமையன்று கசிய விட்டிருக்கிறது. இன அழிப்புக்கான நீதிகோரல் இன்றி, சுயாதீன சர்வதேசச் சாட்சியப் பொறிமுறையும் இன்றி மேலும் ஒன்றரை வருடம் மீண்டும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை இழுத்தடிக்கும் திட்டத்தின் உண்மைக் குறிக்கோள் இலங்கை அரசுடன் பேரம்பேசுவது அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவது என்பது மட்டுமே. தமிழருக்கான நீதி அல்ல.
அதேவேளை பிரித்தானியத் தமிழர் அமைப்புகளுக்கு பிறிதாக எழுதிய பதிற் கடிதங்களில் சர்வதேசப் போர்க்குற்ற நீதிமன்றுக்கு இலங்கை விடயத்தை எடுத்துச் செல்வது உசிதமாகாது என்றும் வீட்டோ பண்ணப்பட்டுவிடும் ஆபத்திருப்பதால் அது நடைமுறையில் பலனளிக்கப்போவதில்லை என்றும், ஆதலால் ஐ.நா. மனித உரிமைச் சபையே தொடர்ந்தும் இலங்கை தொடர்பான மனித உரிமைக் காப்பு விடயங்களுக்குச் சிறப்பான பொறிமுறை என்றும் ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை போதித்திருந்தது.
நடைமுறையில், ராஜபக்ஷ அரசின் அண்மைக்காலக் கடும்போக்கு நகர்வுகள் இந்த நகலைத் தயாரித்த நாடுகள் மீது கடுமையான கருத்துத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது குறித்த வரைபை வாசிக்கும் போது வெளிப்படுகிறது.
இலங்கையுடனான தமது இந்தோ-பசுபிக் புவிசார் அரசியற் பேரம்பேசலை எந்தத் திசையில் கொண்டுசெல்வது என்பதைத் தீர்மானிப்பதற்கு மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் இன்னும் ஒன்றரை வருடங்கள் தேவைப்படுகிறது போலத் தெரிகிறது.
இலங்கை அரசு மீது கடுமையான தொனியில் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றில் கசியவிடப்பட்டது. இதைப் போல தமிழர்களுக்குப் பாதகமாக வெளிப்பட்டிருக்கும் கருக்குழுவின் (Core Group on Sri Lanka) தீர்மானத்தின் வரைபு பிரித்தானியத் தமிழ் வட்டாரங்களிடம் கசியவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சின் லின் சவர்பி என்ற அம்மையாரின் கணினியில் இருந்தே வரைபின் பூச்சியப் பதிப்பு பிரித்தானியத் தமிழ்த் தொடர்புகளுக்குக் கசியவிடப்பட்டிருக்கிறது.
இலங்கையின் இறைமையையும், சுதந்திரத்தையும், ஒருமைத்தன்மையையும், நில ஒருமைப்பாட்டையும் தனது முகப்புக் கூற்று ஒன்றில் (PP3) பிரித்தானியாவின் தீர்மானம் மீளுறுதி (reaffirming) செய்கிறது. இங்கு ஒருமைத்தன்மை (unity) என்பதை உற்றுநோக்குக.
அடுத்ததாக இலங்கையில் 2019, 2020 இல் இடம்பெற்ற தேர்தல்கள் சுதந்திரமான ஜனநாயகரீதியிலானவை என்றும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாக இருந்ததாகவும் ஒப்புக்கொள்வதாக தீர்மானத்தின் பிறிதொரு முகப்புக் கூற்று (PP6) எடுத்தியம்புகிறது. ஆறாம் சட்டத்திருத்தம் இருக்கும் வரை ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை சுதந்திரமான, ஜனநாயகரீதியிலான தேர்தல்கள் என்ற பேச்சுக்கே இலங்கைத் தீவில் இடமில்லை என்பதை அறிந்தும் அறியாத நிலையில் பிரித்தானியா பூச்சாண்டி காட்டியிருக்கிறது.
எனினும் இருபதாம் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதைக் குறிப்பெடுத்துக்கொள்வதாகக் கூறுவதோடு சேர்த்து மாகாண சபைத் தேர்தல்களையும் பதின்மூன்றாம் சடடத்திருத்தத்துக்கமைவாக நடாத்தவேண்டும் என்று வலியுறுத்துவதாக ஒரு கூற்று (PP7) அமைகிறது. இதைத் தமிழருக்குச் சாதகமான ஒரு விடயமாகச் சிலர் கருதலாம்.
ஆனால், பதின்மூன்றாம் சட்டமும் மாகாண சபையும் ஈழத்தமிழர் தேசத்தின் இருப்பையே அழித்தொழிக்கும் கட்டமைப்பு இன அழிப்பையோ தேரவாத பெளத்தம் தொல்லியல் என்ற போர்வைக்குள் புரியும் மரபுரிமைச் சிதைப்பையோ மகாவலிக் குடியேற்றங்களையோ தடுத்துநிறுத்தும் அரசியல் வலு இல்லாத ஒன்றாக இருக்கும் வரை இது ஒரு வெற்றுக்கோசமே. இது இந்திய-பிரித்தானிய ஒன்றிணைந்த அணுகுமுறையையே எடுத்துக்காட்டுகிறது.
வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைந்த மாகாணசபையாக்கவோ அவற்றின் அதிகாரத்தை மற்றைய மாகாணசபைகளின் அதிகாரங்களுக்கும் மேலாக குறைந்தபட்சம் சமஷ்டி நிலைக்கு அதிகரிக்கவோ முடியாத கோரிக்கைகளையிட்டு நாம் மனங்குளிரத்தேவையில்லை (தமிழர் தரப்பு இனிமேல் முன்னெடுக்கவேண்டிய சாத்வீகப் போராட்டமும் கோரிக்கைகளும் யாரைக் குறிவைத்திருக்கவேண்டும் என்பதை எதிர்வரும் நாட்களில் கூர்மையாக இன்னொரு கட்டுரையில் நோக்குவோம்).
தமிழ் அரசியற் கைதிகளைப் பற்றியோ தமிழ்த்தேச நிலச் சூறையாடலைப் பற்றியோ எதுவும் பிரித்தானிய வரைபில் குறிப்பிடவில்லை. ஆனால், காணாமற்போனோருக்கும் இழப்பீட்டுக்குமான அலுவலகங்களை பிரித்தானியாவின் தீர்மான நகல் மெச்சுகிறது (OP3). நடைமுறையில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு நிராகரித்துள்ள பொறிமுறைகள் இவை என்பது கருத்திலேயே எடுத்துக்கொள்ளப்படவில்லை.
முக்கியமான நடப்புக் கோரிக்கைகள் எதுவுமே சுயாதீன சர்வதேச நீதி விசாரணைக்கோ சாட்சியப் பொறிமுறைக்கோ இட்டுச் செல்லவில்லை. ஆயினும் ஆதாரங்கள் தொடர்பாகக் குறிப்பிடும் நடப்புக் கோரிக்கை (OP6) ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தை இலங்கை தொடர்பான சாட்சியங்கைளப் பதிவதற்கும் வேறு நாடுகளில் சட்டநடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கும் பலப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறது. இது தமிழர் எதிர்பார்க்கும் இன அழிப்பு விசாரணைக்கான ஆதாரங்கள் குறித்து அக்கறை செலுத்தும் பொறிமுறையே அல்ல.
அதிகரித்துச் செல்லும் இராணுவமயமாக்கலைப் பற்றிப் பிரஸ்தாபிக்கும் நடப்புக் கூற்றான OP7 தென்னிலங்கை உள்ளடங்கலாக முழுத்தீவிலுமான இராணுவமயமாக்கலைப் பற்றி கவலை கொள்கிறதேயன்றி தமிழர் தாயகத்தில் நடந்தேறியிருக்கும் சிங்கள இராணுவமயமாக்கலின் ஆபத்துக்களைத் தனித்துவமாகப் பார்க்கவில்லை.
மரணமெய்தும் இஸ்லாமிய சகோதரர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அவர்களுக்கிருக்கும் உலகளாவிய சமய உரிமையை கொரோணாவைக் காரணம் காட்டி மறுத்து தகனம் செய்யுமாறு பணிக்கும் இலங்கை அரசின் போக்குக் குறித்து கவலைவெளியிட்டிருக்கும் வரைபு (OP8) அதைப் போலவே போரில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய தமிழர்களை நினைவுகூருவதை இலங்கை அரசு மறுத்துவருவதைப் பற்றியோ இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்புத் தூபி பற்றிய கரிசனைகைளயோ வெளியிடத் தயங்கியிருக்கிறது.
விழலுக்கிறைத்த நீர்போல, மீண்டும் மீண்டும் இலங்கை அரசிடமே போர்க்குற்றங்களை விசாரித்துத் தண்டனை வழங்குமாறு உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்துகிறது இந்தத் தீர்மான வரைபு (OP9).
நாற்பத்தொன்பதாம் மனித உரிமைப் பேரவைக் கூடலில் (2022 பெப்ரவரி) வாய்மூல அறிக்கையிடலையும் ஐம்பத்தோராம் கூடலில் (2022 செப்ரெம்பர்) முழுமையான எழுத்துமூல அறிக்கையையும் உயர்ஸ்தானிகரிடம் கோரிநிற்கிறது இந்தத் தீர்மானத்தின் வரைபு.
ஒட்டுமொத்தமாகக் கூறின், இலங்கை அரசு சீனாவிடம் ஓடிவிடக்கூடாது என்ற பீதியோடுதான் அனைத்துக் கூற்றுகளும் எழுதப்பட்டுள்ளன. அதாவது, மேற்குலகினதும் இந்தியாவினதும் இந்தப் பீதியைத் தனது பேரம்பேசலின் பலமாக கோத்தபாய ராஜபக்ஷ கொண்டிருக்கிறார் என்பது வெள்ளிடைமலையாக வெளிப்படுகிறது.
இந்தத் தீர்மான வரைபைப் பற்றி ஒரு வரியில் சொல்வதானால் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டு சிங்கள தேசத்தோடு தனது பிராந்திய நலனைப் பேரம்பேசுவதற்காக தமிழருக்கான சர்வதேச நீதியை மீண்டும் மறுத்து கண்துடைப்பையும் கால நீடிப்பையும் தீர்வாகப் பிரேரித்துள்ளன என்றே சொல்லமுடியும்.
இந்தத் தீர்மான வரைபின் உள்ளடக்கத்தை முழுமையாக அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்காக அதன் மூல வடிவம் கீழே தரப்படுகிறது. அதை வாசிப்பதற்கு முன்னதாக ஐ.நா. தீர்மானங்கள் குறித்த சில அடிப்படைகளைத் தெரிந்திருப்பது நல்லது.
முதலில் ஒரு தீர்மானம் எந்த நிகழ்ச்சி நிரலின் (Agenda Item) கீழ் வெளிப்படுகிறது என்பது அந்தத் தீர்மானத்தின் ஒட்டுமொத்தக் கனதியைக் கோடி காட்டும். இதுவரை கனதி குறைந்த நிகழ்ச்சி நிரலான இரண்டாம் நிகழ்ச்சிநிரலுக்குள்ளேயே இலங்கை நிலைமை கையாளப்பட்டுவருகிறதே அன்றி கடுமையான கனதிக்குரிய நான்காவது நிகழ்ச்சி நிரலுக்குள் அல்ல. அதே சமயம், ராஜபக்ஷ அரசு இரண்டாம் நிகழ்ச்சி நிரலில் இருந்தும் மிகவும் கனதி குறைந்த பத்தாம் நிகழ்ச்சிநிரலுக்குள் இலங்கை விவகாரத்தை நகர்த்திவிட முயற்சி செய்துவருகிறது. இந்தமுறைத் தீர்மானமும் இரண்டாவது நிகழ்ச்சிநிரலுக்குள்ளேயே கையாளப்படுமா, அல்லது பத்தாவதுக்குள் நகர்த்தப்பட்டுவிடுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
ஒரு தீர்மானம் எத்தனை பக்கங்களில் அமைந்தாலும், அது ஒரே ஒரு நீளமான வசனம் போலவே கட்டமைக்கப்பட்டிருக்கும்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கான வரைபின் ஒவ்வொரு பதிப்புக்கும் (version) தனித்துவமான இலக்கம் இருக்கும். அது ஒரு குறித்த திகதியோடு தொடர்புபடுத்தப்பட்டிருக்கும். அந்த வகையில் தற்போது கசிந்திருக்கும் இந்த வரைபு பூச்சியப் பதிப்பு இலக்கத்துக்குரியது. பெப்ரவரி 19ம் திகதிக்குரிய இந்தப் பதிப்பில் ஐ.நா. இலச்சினை எதுவும் இல்லை.
ஒவ்வொரு தீர்மானமும் ஒரு நீளமான வசனமாகவே பார்க்கப்பட்டாலும், அந்த வசனம் பல கூற்றுக்களின் தொகுப்பாகவே அமையும். இதனால் ஒவ்வொரு கூற்றும் (அல்லது உப கூற்றுக்கள் அடங்கிய பந்திகளும்) முற்றுப்புள்ளியிடப்படாது, கால் அல்லது அரைக்காற்புள்ளியோடு முடிக்கப்பட்டிருக்கும்.
இந்தத் தீர்மானத்தின் பூச்சிய வரைபில் மொத்தம் இருபத்தொரு கூற்றுக்கள் உள்ளன.
இனி, ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களில் இடம்பெறும் கூற்றுகள் ஒவ்வொன்றும் இரண்டு வகைக்குரியனவாக இருக்கும் என்பதைக் கவனிக்கவேண்டும். முகப்புக் கூற்று என்பது முதலாம் வகை. நடப்புக் கூற்று என்பது அடுத்த வகை. முகப்புக் கூற்றுகள் ஆரம்பத்திலும் (Preambular Paragraphs) நடப்புக் கூற்றுகள் (Operative Paragraphs) இறுதியுமாக அடுக்கப்பட்டிருக்கும். கடைசிக்கூற்று முற்றுப்புள்ளியோடு முடியும்.
பொதுவாக நடப்புக் கூற்றுகளே இலக்கமிடப்படுவது வழக்கம். இவையே நடைமுறைப்படுத்தலுக்குரியவை.
இந்தப் பூச்சிய வரைபின் இருபத்தொரு கூற்றுக்களில் பதினாறு நடப்புக் கூற்றுக்கள் (OP என்று தொடங்குபவை) உள்ளன. இவையே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியவை.
ஒவ்வொரு கூற்றின் ஆரம்பத்திலும், அதன் வகையைப் பொறுத்து அதற்குரிய முகப்புச் சொற்தொடர் (Preambulatory Phrase) அல்லது நடப்புச் சொற்தொடர் (Operative Phrase) சரிவான எழுத்துருவில் தரப்பட்டிருக்கும். இந்தச் சொற்தொடரே குறித்த கூற்றின் தனித்துவமான கனதியை எடுத்தியம்பும் அளவுகோல்.
ஆக, தீர்மானத்தின் நிகழ்ச்சிநிரல் (Agenda Item), அதில் உள்ளடக்கப்படும் கூற்றின் வகை (PP or OP) மட்டுமல்ல, கூற்றின் ஆரம்பத்தில் கையாளப்பட்டிருக்கும் சொற்தொடரும் (Phrase) அதன் கனதியைப் புரிந்துகொள்வதற்கு அவசியமாகிறது. இந்தச் சொற்தொடர் பற்றியே கடும் இழுபறிகள் ஏற்படுவதுண்டு. கீழே தரப்பட்டிருக்கும் வரைபில் நாம் குறித்த சொற்தொடர்களுக்குக் கீழே கோடிட்டுக் காட்டியுள்ளோம்.
பதினாறு நடப்புக் கூற்றுகளிலும் மொத்தம் ஒன்பது விதமான சொற்தொடர்கள் கையாளப்பட்டுள்ளன: Welcomes, Acknowledges, Stresses, Notes, Recognises, Expresses, Calls, Requests, மற்றும் Encourages என்பவையே அவை. இவற்றில் Stresses என்பதே கனதியானது. இது விடுதலைப்புலிகளின் குற்றங்களைக் குறிப்பாகத் தண்டிக்கக் கோரும் கூற்றிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் உற்று நோக்குக.
தமிழ் என்ற சொல் கூட தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கப் பெயரை ஆங்கிலத்தில் எழுதும் இடத்தில் மட்டும் தான் வந்திருக்கிறது.
ஒரு தீர்மானத்தின் தனித்தனிக் கூற்றுகள் ஒவ்வொன்றுமே அதன் வரைபை உருவாக்கும் போதோ, அல்லது வாக்குக்கு விடும் போதோ, பங்குபெறும் உறுப்புரிமை நாடுகளால் பேரம்பேசப்பட்டு மேலும் வலிமையாக்கப்படவோ, பலவீனப்படுத்தப்படவோ அல்லது முற்றாக அகற்றப்படவோ வாய்ப்பு உள்ளது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்படவேண்டிய கூற்றுக்களை கருக்குழுவில் பங்குபெறும் இதர ஐந்து நாடுகளின் சம்மதத்தோடுதான் பிரித்தானியா கொண்டுவந்திருக்கும் என்பதால், இதில் குறிப்பாகக் கனடாவுக்கும் ஜேர்மனிக்கும் நேரடிப்பங்கு இருக்கும் என்று நாம் நிச்சயம் நம்பலாம். மிகுதி மூன்று நாடுகளான மாலாவி, மசிடோனியா மற்றும் மொன்றிநீக்ரோ பெயருக்காகத் தொங்கிக்கொண்டிருப்பவையாகக் கருதப்படலாம்.
ஜேர்மனியில் சில முன்னாள் விடுதலைப்புலிகள் தற்போது தண்டிக்கப்பட்டுவருகிறார்கள் என்பதும் இங்கு நோக்கப்படவேண்டியது.
ஆரம்பமே பலவீனமாக இருக்கும் இந்தப் பூச்சிய வரைபு போகப்போக „கழுதை தேய்ந்து கட்டெறும்பான“ கதையாக மார்ச் மாத நடுப்பகுதிக்குள் மேலும் பலவீனமடைவதற்கான வாய்ப்புகளே அதிகம் உண்டு.
ஈழத்தமிழர்களுக்கு ஐக்கிய இராச்சியம் தந்தருளியிருக்கும் பூச்சிய வரைபு பின்வருமாறு அமைகிறது. வாசித்துப் பாருங்கள்:
Zero Draft
19 February 2021
46th Session of the Human Rights Council
Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka
The Human Rights Council,
PP1: Guided by purposes and principles of the Charter of the United Nations, reaffirming the Universal Declaration of Human Rights and recalling the International Covenants on Human Rights and other relevant instruments,
PP2: Recalling Human Rights Council resolutions 19/2, 22/1 25/1, 30/1, 34/1 and 40/1 on promoting reconciliation, accountability and human rights in Sri Lanka,
PP3: Reaffirming its commitment to the sovereignty, independence, unity and territorial integrity of Sri Lanka,
PP4: Reaffirming also that it is the primary responsibility of each State respect, to promote and fulfill human rights as well as to ensure the full enjoyment of all human rights and fundamental freedoms of its entire population,
PP5: Deploring the acts of terrorism which occurred in Sri Lanka in April 2019 leading to high numbers of injuries and deaths,
PP6: Acknowledging the holding of free and transparent democratic elections in November 2019 and August 2020,
PP7: Taking note of the passage and operationalization of the twentieth amendment to the Constitution of Sri Lanka while stressing the importance of democratic governance and independent oversight of key institutions, and also encouraging the Government to respect local governance including holding of elections for provincial councils, and ensure that all provincial councils are able to operate effectively, in accordance with the thirteenth amendment to the Constitution of Sri Lanka,
PP8: Reaffirming that all Sri Lankans are entitled to the full enjoyment of their human rights without distinction of any kind such as religion, belief or ethnic origin, in a peaceful and unified land,
PP9: Acknowledging the progress made by the Government of Sri Lanka in rebuilding infrastructure, demining, land return, resettling internally displaced persons and improving livelihoods, and encouraging further efforts in these areas,
PP10 Welcoming the continued commitment by the Government of Sri Lanka to remain engaged with and seek the assistance of the United Nations and its agencies, including human rights mandates and mechanisms, in capacity building and technical assistance,
PP11: Reaffirming also that measures taken to combat terrorism must comply with States� obligations under international law, in particular international human rights law, international refugee law and international humanitarian law,
PP12: Emphasizing the importance of a comprehensive approach to dealing with the past incorporating the full range of judicial and non-judicial measures, in order to ensure accountability, serve justice, provide remedies to victims, avoid recurrence of violations of human rights and promote healing and reconciliation,
PP13: Recognizing that mechanisms to redress past abuses and violations work best when they are independent, impartial and transparent; and use consultative and participatory methods, that include the views from all relevant stakeholders including, but not limited to, victims, women, youth, representatives from various religions, ethnicities, and geographic locations as well as people from marginalized groups,
PP14: Recalling the responsibility of States to comply with their relevant obligations to prosecute those responsible for gross violations of human rights and serious violations of international humanitarian law,
PP15: Noting with appreciation the work of the Office of the High Commissioner for Human Rights towards the promotion and protection of human rights and truth, justice, reconciliation and accountability in Sri Lanka,
OP1: Welcomes the oral update presented by the United Nations High Commissioner for Human Rights to the Human Rights Council at its forty-third session and the report of Office of the High Commission for Human Rights at its forty-sixth session;
OP2: Also welcomes the positive engagement between the Government of Sri Lanka and the Office of the High Commissioner for Human Rights between 2015 and 2019, urges the continuation of such engagement and calls on Sri Lanka to implement the recommendations of the Office of the High Commissioner for Human Rights;
OP3: Acknowledges the progress achieved by the Office on Missing Persons and the Office for Reparations and stresses the importance of maintaining support to these institutions, safeguarding their independent and effective functioning, providing both offices with sufficient resources and technical means to effectively fulfill their mandates, allowing them to proceed with interim relief measures for affected vulnerable families, with a gender focus, and resolving the many cases of enforced disappearances so that families of the disappeared can know their fate and whereabouts;
OP4: Stresses the importance of a comprehensive accountability process for all violations and abuses of human rights committed in Sri Lanka, including those by the Liberation Tigers of Tamil Eelam, as highlighted in the OISL report of September 2015;
OP5: Notes the persistent lack of accountability through domestic mechanisms and regrets that the domestic Commission of Inquiry announced on 22 January 2021 lacks independence and does not include a mandate to pursue accountability for past gross violations of human rights, or for serious violations of international humanitarian law,
OP6: Recognises the importance of preserving and analysing evidence relating to violations and abuses of human rights in Sri Lanka with a view to advancing accountability and decides to strengthen the capacity of the Office of the High Commissioner for Human Rights to consolidate, analyse and preserve information and evidence and develop possible strategies for future accountability processes for gross violations of human rights or serious violations of international humanitarian law, to advocate for victims and survivors, and to support relevant judicial proceedings in Member States with competent jurisdiction;
OP7: Expresses serious concern over emerging trends over the past year, which represent clear early warning signs of a deteriorating human rights situation in Sri Lanka, including the accelerating militarization of civilian government functions, erosion of the independence of the judiciary and key institutions responsible for the promotion and protection of human rights, ongoing impunity and political obstruction of accountability for crimes and human rights violations in �emblematic cases�, policies that adversely affect the right to freedom of religion or belief i, surveillance and intimidation of civil society and shrinking democratic space, arbitrary detentions, allegations of torture and other cruel, inhuman degrading treatment or punishment and sexual and gender based violence, and that these trends threaten to reverse the limited but important gains made in recent years and risk the recurrence of policies and practices that gave rise to the grave violations of the past;
OP8 Expresses further concern that the COVID-19 pandemic has impacted on freedom of religion or belief and exacerbated the prevailing marginalisation and discrimination suffered by the Muslim community, and that the Government of Sri Lanka�s decision to mandate cremations for all those deceased from COVID-19 has prevented Muslims and members of other religions from practicing their own burial religious rites, and has disproportionately affected religious minorities and exacerbated distress and tensions,
OP9: Calls upon the Government of Sri Lanka to ensure the prompt, thorough and impartial investigation and, if warranted, prosecution of all allegations of gross human rights violations and serious violations of international humanitarian law including for longstanding emblematic cases,
OP10: Also calls upon the Government of Sri Lanka to ensure the effective and independent functioning of the National Human Rights Commission, the Office on Missing Persons and the Office for Reparations;
OP11: Further calls upon the Government of Sri Lanka to protect civil society actors, to investigate any attacks and ensure a safe and enabling environment in which civil society can operate free from hindrance, insecurity and reprisals;
OP12: Requests the Government of Sri Lanka review the Prevention of Terrorism Act, and ensure that any legislation to combat terrorism complies with its international human rights and humanitarian law obligations;
OP13: Urges the Government of Sri Lanka to foster religious freedom and pluralism by promoting the ability of all religious communities to manifest their religion, and to contribute openly and on an equal footing to society;
OP14: Encourages the Government of Sri Lanka to continue to cooperate with special procedures mandate holders, including responding formally to outstanding requests;
OP15: Also encourages the Office of the High Commissioner and relevant Special Procedures mandate holders to provide, in consultation with and with the concurrence of the Government of Sri Lanka, advice and technical assistance on implementing the abovementioned steps,
OP16: Requests the Office of the High Commissioner to enhance its monitoring and reporting on the human rights situation in Sri Lanka, including progress on reconciliation and accountability, and to present a written update to the Human Rights Council at its forty-ninth session, and a comprehensive report including further options for advancing accountability at its fifty-first session, both to be discussed in interactive dialogues.
**நன்றி கூர்மை