பிரித்தானியா தடை நீக்கம்:மரணம் -13!
கொவிட்-19 புதிய திரிபு பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனிடையே இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன. முன்னதாக 9 மரணங்கள் பதிவானமையே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிக கொரோனா மரணங்களின் எண்ணிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியதுடன், மொத்த எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளது.
நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்தார்.
அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் அக்கரபத்தனை வைத்தியசாலையிலிருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்தார்.
பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி மரணித்தார்.
போம்புவல பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். மோசமடைந்த மூச்சிழுப்பு நோய் தொற்று மற்றும் நுரையீரல் புற்றுநோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நாபொட பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 10 ஆம் திகதி தனது வீட்டில் மரணித்தார். குருதி நஞ்சானமை, கொவிட்-19 தொற்று மற்றும் தீவிர நீரிழிவு நோய் நிலைமையை அவரின் மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கொண பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட இருதய நோய் மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். கொவிட் நியூமோனியா மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். கொவிட்-19 தொற்றுடன் குருதி நஞ்சானமை மற்றும் இருதய நோய் நிலைமை அவரின் மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார். கொவிட்-19 தொற்று, நுரையீரல் நோய் நிலைமை மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று மரணித்தார். கொவிட்-19 நியூமோனியா, குருதி நஞ்சானமை மற்றும் நுரையீரல் புற்றுநோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேவுட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 3 ஆம் திகதி மரணித்தார். கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர சிறுநீரக பாதிப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவர் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில் நேற்று உயிரிழந்தார். கொவிட் தொற்றுடன் மோசமடைந்த இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.