பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக உலகத்திடம் நீதி வேண்டி சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கினார் அம்பிகை செல்வக்குமார்
பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக
முழங்காலில் இருந்து உலகத்திடம் நீதி வேண்டி சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கினார் அம்பிகை செல்வக்குமார் அவர்கள்.
12 ஆண்டுகளாக இந்த உலக ஏகாதிபத்தியம் தமிழினத்தின் இனப் படுகொலைகளுக்கு எதிரான எந்தவொரு பாதுகாப்பு பொறிமுறைகளையும் இதுவரையும் ஏற்படுத்தாத நிலையில் தமிழினம் தொடர்ந்தும் சனநாயக வழியில் போராடி வருகிறது.
அதன் தொடர்ச்சியே தாயகத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாமெரும் நடைபயணமும் அதைத்தொடர்ந்து உலக முன்றங்களில் தொடங்கப்பட்டுவரும் தன்னெழுச்சியான உணவுத்தவிர்ப்பு போராட்டங்களும்.
எம்மினம் நீதிவேண்டி தன்னை அர்ப்பணித்த தியாகவுணர்வுகளை இந்த உலகம் கண்டும் காணாததுபோல் கடந்துசெல்வது தொடர்ந்தாலும்
சனநாயக வழியில் நம்பிக்கையோடு இவ்வாறான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
எம்மக்களின் அழுகுரல்கள் என்றோ ஒருநாள் பன்னாட்டு அரசுகளின் மூடிய செவிகளைத் திறக்கும்.
பல மாவீரர்களின் உயிர் அர்ப்பணிப்புகளாலும்,தியாகங்களாலும் விடுதலை வேண்டிய மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களாலும்
கட்டியெழுப்பப்பட்டுவரும் தமிழர் வரலாறு நிச்சயம் தமிழருக்கான விடுதலை தேசத்தை உருவாக்கியே தீரும்.