சஜித் நாட்டு மக்களுடன் தான் டீல் பேசுகிறார்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுடன் தான் டீல் பேசுகிறாரே தவிர அரசியல் வாதிகளுடன் பேசவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் உமாச்சந்திரப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பக்கம் செல்பவர்களுக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் மற்றும் எரிபொருள் நிலையங்களுக்கான அனுமதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் அவற்றை ஆதாரங்களுடன் முன்வைக்க முடியாது, எமது நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவுபூர்வமானவர்கள் தமது பெயரில் அனுமதிகளைப் பெற மாட்டார்கள்.
இவ்வாறான அனுமதிகளை கொடுத்தோ , அல்லது தருவதாக வாக்குறுதி வழங்கியோ ஆதரவை பெற வேண்டிய தேவை எமது வேட்பாளருக்கு இல்லை.
எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று பல்வேறு உதவிகளை தனது சொந்த பணத்திலே வழங்கி வருகிறார்.
பாடசாலைகளுக்கு பேருந்துகள் மற்றும் பாடசாலைகளில் இலத்திரனியல் வகுப்பறைகளை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து பல கோடி ரூபாய்களை செலவழித்து வருகிறார்.
சஜித் பிரேமதாசர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மக்களுடன் டீல் பேசி வருகிறார்.
ஆகவே நாட்டு மக்கள் தமது எதிர்காலத்தை சிந்தித்து நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கக்கூடிய ஊழல் அற்ற தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்