Dezember 3, 2024

ஜனாதிபதிக்கு எதிரான மனு தள்ளுபடி!

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிமன்ற கட்டணமாக 50,000 ரூபாய் செலுத்துமாறும் மனுதாரருக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு பொய்யாக தகவல்களை   சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த மனு  அரசியலமைப்பின் 92 வது சரத்தை மீறுவதாகவும் இருப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே  இதன் போது ஆட்சேபனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert