பொதுத் தேர்தல் – வாய்ப்புகள் அதிகம் !
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து 66 நாட்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் ஜனாதிபதி தனக்கு பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என எண்ணினால் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடந்தால் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட்டு 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் என சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.