Dezember 3, 2024

போர்க் குற்றவாளிகளை எமது அரசாங்கம் தண்டிக்காது

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கத் தனது அரசாங்கம் முயலாது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். 

 ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

மனித உரிமை மீறல்கள் எனக் கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உடன்பாட்டைப் பெறுவதிலும் கவனம் செலுத்துவோம்.

அரசாங்கத் துருப்புக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே யுத்தத்தின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விசாரணைகளை நடத்துவதற்கும் ஏதுவாக அமைந்தது. பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினை, பழிவாங்கும் வகையில் இருக்கக் கூடாது. 

ஒருவரைக் குற்றம் சாட்டும் வகையில் இருக்கக் கூடாது. ஆனால் உண்மையைக் கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கூட யாரும் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 

என்ன நடந்தது என்பதை மட்டுமே அவர்கள் அறிய விரும்புகிறார்கள் எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert