Dezember 3, 2024

300 வேட்பாளர்கள் வெளிநாடுகளில் – தேர்தலை நடத்துவதில் சிக்கல்

உள்ளுராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பல்வேறு காரணங்களால் சுமார் 500 வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க கருத்து தெரிவித்த போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்களை கண்டறியும் விசேட நடவடிக்கை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், வேட்பாளர்கள் தொடர்பில் அவ்வாறான விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert