ராஜபக்சக்களுடன் வந்தால் வாக்கில்லை:சித்தர்!
ராஜபக்சவினரின் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், தேர்தலில் ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால் அவருக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைப்பது கடினமாக அமையும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒப்பிடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமெனவும் த. சித்தார்த்தன் கூறியுள்ளார்.
ஜனாhதிபதி தேர்தலை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்குக்கான பயணங்களை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்ப்பு வெளியிட்டாலும், அதனை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இருப்பதாக சித்தார்த்தன் கூறியுள்ளார்.
எனினும் பொதுவேட்பாளர் விடயத்திற்கு ஆதரவளிப்பதாக த.சித்தார்த்தன் காண்பித்துக்கொண்டாலும் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய உறவையே அவர் பேணிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.