November 23, 2024

பௌத்தனே இல்லாத நெடுந்தீவில் மாநாடாம்!

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு பௌத்தர்கள் எவருமேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் நடைபெற்றுள்ளது.

நயினாதீவு நாகதீப ரஜமஹா விகாரையில் உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடும் நடைபெற்றிருந்தது.

பௌத்த அமைப்புகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், இளம் தலைமுறையினரிடையே மதத்தின் விழுமியங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு மாநாடு நடைபெற்றது.

உலக இளைஞர் பௌத்த சங்க சபை மற்றும் உலக பௌத்த முன்னணியின் தலைவர்கள் தமது அமைப்பு தொடர்பிலும் எதிர்காலத் திட்டம் தொடர்பிலும் மாநாட்டில் உரையாற்றினர். 

நாகதீப ரஜமகா விஹாரையின் விகாராதிபதி  யாழ். மாவட்ட செயலாளர்;, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, வட பிராந்திய கடற்படைத் தளபதி ரோஹித்த அபேசிங்க, யாழ்ப்பாண புத்தசாசன பேரவையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் மாநாடில் பங்கேற்றிருந்தனர்.

இதனிடையே பௌத்த கலாச்சார அமைச்சர் விதுரவும் மாநாட்டிற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert