பொதுவேட்பாளர்;வவுனியாவில் புதிய கூட்டு!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் சார்ப்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகள் மும்முரமடைந்துள்ளது.
எனினும் தமிழ் கட்சிகளுக்கு இடையே இன்னமும் பொது வேட்பாளர் தொடர்பில் பொது இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் வவுனியாவில் சிவில் சமூகத்தினர் பெயரில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.
அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது.
அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.
தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது.
போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஊடகங்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.