புலிகளை தேடி கிளிநொச்சி சென்றிருந்த எரிக்!
இன்று (01) கிளிநொச்சிக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் முன்னாள் இலங்கையின் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் சமாதான காலத்தில் தான் சமாதான தூதுவராக பணியாற்றி போது கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் அதன் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை பார்வையிட்டுள்ளார்.
வருகை தந்தை அவரை பரவிபாஞ்சானில் காணப்பட்ட அரசியல் துறை நடுவப் பணியகம், மற்றும் சமாதான செயலகத்தை காட்டியிருந்தேன். இடங்களின் பௌதீக சூழல் மாறியிருந்ததன் காரணமாக அவரால் இடங்களை அடையாளப்படுத்த முடியாமல் இருந்தது. இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களான தலைவரை சந்தித்து படங்களுடன் தற்போதைய அந்த இடங்களை ஒப்பிட்டு நினைவுகளை மீட்டுக்கொண்டார்.
தற்போது அங்கு வசிக்கின்ற வீட்டு உரிமையாளராக பெண்னிடம் என்ன நினைக்கின்றீர்கள் என வினவிய போது சண்டை மட்டுமே இப்போது இல்லை மற்றும் படி நாங்கள் எதிர்பார்த்த வேறு எதுவும் நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் கனதியான பதிலை வழங்யிருந்தார் என பதிவிட்டுள்ளார் கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ் செல்வன்.