13இல் தீர்வு:புதிய சாத்திரி எரிக்
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மிக குறுகிய காலத்தில் கிடைக்குமென ஆருடம் தெரிவித்துள்ளார் முன்னாள் நோர்வே சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் ஊடகங்களிடையே கருத்து தெரிவித்துள்ளார்.
நோர்வே முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ரணில் அரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்குமிடையேயான சமாதான பேச்சின் தூதராக எரிக் சொல்ஹெய்ம் 2009 இற்கு முன்னராக செயற்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போதைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்; காலநிலை தொடர்பான சிறப்பு ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டுவருகின்றார்.
சர்ச்சைக்குரிய வகையில் அண்மையில் தமிழகம் பயணித்திருந்த எரிக் சொல்ஹெய்ம் தமிழக முதல்வருடன் பேச்சுக்களை நடாத்தியிருந்தார்.
இன அழிப்பு மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசினை காப்பாற்றுவதில் எரிக் சொல்ஹெய்ம் முன்னின்று செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.