13660 மாணவர்கள் போட்டியிட்ட போட்டியில் வெற்றியீட்டிய பிரான்சில் வாழும் தமிழீழ மாணவி
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட பிரான்ஸ் வாழ் , யாழ்ப்பாண சிறுமி பொருளாதாரத்திற்கான ஆராய்வும் தீர்வும்) என்ற தலைப்பிலான போட்டியில் வெற்று பெற்று சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகரை சேர்ந்த புலம்பெயர் தமிழர்களின் மகள் லேயா (Léa ) என்பவரே இந்த சாதனைக்குரியவராவார்.
France éducation nationale சார்பில் banque de France இனால் நடாத்தப்பட்ட “PRIX DE L’EXCELLENCE ÉCONOMIQUE EN STMG «(பொருளாதாரத்திற்கான ஆராய்வும் தீர்வும்)என்ற தலைப்பிலான போட்டியில்(concours) மாவாட்ட ரீதியில் (académie Créteil) முதலாம் இடத்தினையும்,தேசிய ரீதியில்(académie nationale) மூன்றாம் இடத்தினை பெற்று லேயா (Léa ) சாதனை படைத்துள்ளார்.
அதேசமயம் இந்த போட்டியில் 13660 மாணவர்கள் போட்டியிட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், வெற்றி பெற்ற மாணவிக்கு பாரட்டுக்களை பலரும் கூறிவருகின்றனர்.
புலம்பெயர் வாழ் தமிழர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்தாலும் தம் பிள்ளைகளை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்கி வருகின்ற நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் எமது அடுத்த தலைமுறையினர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.