பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் 04-02-2024!
பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்! பிரித்தானியாவாழ் மக்களால் முன்னெடுக்கின்ற சமவேளையில்
சிறிலங்காவின் சுதந்திரநாள், தமிழர்களிற்கு கரிநாள்!! என்ற தாயக தமிழ் மக்களின் உணர்வுடன், உலகத்தமிழ் மக்களால் ஓங்கியொலிக்க படவுள்ள குரலுடன் பிரான்சு வாழ்தமிழீழ மக்கள் நாமும் இணைந்து கொள்வோம்.
காலம் : 04.02.2024 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 3.00 மணிக்கு
இடம்: 37 Bis Bd de la Chapelle / 75010 Paris
பிரித்தானிய பேரரசிடமிருந்து சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் இன்றுவரை எமது தாயகமான தமிழீழ தேசம், சிங்களப் பேரினவாதத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அன்று மறுக்கப்பட்ட நீதி, இன்று வரை மிகப்பெரிய இனஅழிப்பை தமிழினம் சந்தித்து நிற்கிறது. பிரித்தானியா உட்பட உலகின் பல நாடுகளில் தமிழர்கள் ஏதிலிகளாக வாழும் நிலையை உருவாக்கியது. பிறப்பால் சுயநிர்ணய உரிமையை கொண்டுள்ள தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சி அதிகாரம் இன்றி நாடற்றவர்களாக வாழ்கிறோம். ஏனெனில் எமது மண் சிறிலங்கா பேரினவாத தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே எமது வலிகளையும் நியாயப்பாடுகளையும், இன்றும் தாயகத்தில் எம்மவர்கள் குரல்வளை நசுக்கப்பட்டு திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதையும் அனைத்துலக மக்களிற்கும் தெரியப்படுத்து வோம்.
இவ் மாபெரும் ஒன்றுகூடல் பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு , தமிழ் இளையோர் அமைப்பு, மற்றும் அனைத்து உப தாயககட்டமைப்புக்கள இணைந்து ஒழுங்கமைப்பு செய்துள்ளன. அனைத்துத் தமிழ்மக்களையும் சிறிலங்காவின் சுதந்திரநாளை தமிழீழ தேசத்தின் கரிநாள் என்பதை பிரெஞ்சு தேசத்துக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்தும் இவ்வரலாற்று பதிவுநாளில் அனைவரையும் அழைக்கின்றோம.
எமது உரிமைக்குரலை உரத்துக்கூறுவோம்!
இனமான உணர்வோடு ஒன்றாகுவோம்!
தமிழீழ மக்கள் பேரவை-பிரான்சு / 06 52 72 58 67
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு -பிரான்சு / 06 62 84 66 06
மேலதிக தொடர்புகளுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு / 01- 48 22 01 75 – 06 29 16 25 41