உணர்வுப்பிரவாகம் தயாராகும் தேசம்
மாவீரர் தின நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இம்முறை பெருமெடுப்பில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
நல்லூர் மற்றும் முள்ளியவளை பகுதிகளில் 1987 முதல் 2009 இறுதி யுத்தம் வரை களப்பலியான மாவீரர்களது பெயர்பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையெ வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் „கார்த்திகை வாசம்“ என்ற பெயரில் நடாத்திவரும் மலர் கண்காட்சி இன்று(22) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயங்கத்தின் ஏற்பாட்டில் தாவர உற்பத்தியாளர்களும் இணைந்து நடாத்தும் இக்கண்காட்சி, இந்த மாதம் 30ஆம் திகதி வரை தினமும் காலை தொடக்கம் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ளது.
நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சமூக அரசியற் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை மாவீரர்களது பெற்றோர்களிற்கு மதிப்பளிக்கும் செயற்படுகள் கிராமங்கள் தோறும் இம்முறை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் இலங்கை காவல்துறையினரின் சித்திவரதையால் உயிரிழந்த இளைஞனிற்கு நீதி கோரி சர்வதேச நாடுகளது கவனத்திற்கு கொலையினை எடுத்துச்செல்ல சிவில் அமைப்புக்கள் முற்பட்டுள்ளன.