இரகசியம் பேணப்படும் இலக்க தகடுகள்!
கொக்கிளாய் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விசேட ஸ்கேனர் இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படவுள்ளது.
கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை விசேட ஸ்கேனர் இயந்திரம் மூலம் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது. எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக விசேட ஸ்கான் சோதனை நடைபெறுமென சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரே ஸ்கேன் இயந்திரத்தினை கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாதுள்ள நிலையில் அகழ்வுப்பணிகள் இரண்டு வாரங்களிற்கு மட்டுமே முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.