சுமந்திரனுள்ளும் புகுந்தததா விடுதலை ஆவி!
தமிழரசுக்கட்சியின் தலைவர் கதிரைக்கு போட்டியிட எம்.ஏ.சுமந்திரன் தயாராகியுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர் குடும்பங்களது கௌரவிப்பிற்கு தனது சொந்த நிதியிலிருந்து நிதி அள்ளி வழங்கியுள்ளார்.
இதனிடையே வடமராட்சியில்; மாவீரர்களின் பெற்றோர்கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரனும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்இடம் பெற்ற நேர்காணலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தினை தான் ஏற்கவில்லை என அடியோடு மறுத்த சுமந்திரன் இதனை நான் வடக்கிலும் தெற்கிலும் தைரியமாக கூறுவேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் பின்னராக வெட்டி ஒட்டி நாடாளுமன்ற கதிரையை பெற்றிருந்தார்.
இந்நிலையில் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்வை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் ஏற்பாடு செய்திருந்தார்.