இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்
இத்தாலியின் முன்னாள் பிரதரமரும், முன்னாள் ஏசி மிலன் உரிமையாளரும், இத்தாலியின் மிகப் பொிய ஊடக நிறுவனமான மீடியா செட் நிறுவனருமான, ஃபோ்ஸா இத்தாலியா அரசியல் கட்சியின் தலைவருமான பெர்லஸ்கோனி தனது 86 வயதில் காலமானார்.
சிலகாலமாக பெர்லஸ்கோனி லுகேமியா நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சமீபத்தில் நுரையீரல் தொற்று ஏற்பட்டது. ஏப்பிரல் மாதம் மிலானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் முன்பு இதய நோய்கள் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் மற்றும் 2020 இல் கொவிட் – 19 நோயால்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1994 தொடக்கம் 2011 க்கு இடையில் மூன்று அரசாங்கங்களுக்கு தலைமை தாங்கி பிரதமராக இருந்தார்.
பெர்லுஸ்கோனியின் கட்சி பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் வலதுசாரி கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவருக்கு அரசாங்கத்தில் பங்கு இல்லை.
இரசிகர்கள் அவரது கவர்ச்சி மற்றும் விருப்பத்தின் சக்தியைப் பாராட்டினர., அதே நேரத்தில் விமர்சகர்கள் அவரை ஒரு ஜனரஞ்சகவாதி என்று கேலி செய்தனர். அவர் தன்னையும் தனது வணிகங்களையும் வளப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
தனிப்பட்ட முறைகேடுகள் இருந்ததால் பெர்லுஸ்கோனி பிடிக்காதவராக மாறினார். அவர் மீது சுமத்தப்பட்ட கிரிமல் வழக்குகள் மேல்முறையீட்டினால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இளம் பெண்கள் மற்றும் சிறார்களை உள்ளடக்கிய அவரது „புங்கா புங்கா“ விருந்துகள் அல்லது அவரது வணிக பரிவர்த்தனைகளை ஆய்வுகள் குறிவைத்தன.
திரைப்பட உரிமைகள் விற்பனை சம்பந்தப்பட்ட வரி மோசடி வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்தது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான பெர்லுஸ்கோனியின் நட்பு அவரை உக்ரைனுடன் உறுதியாக இணைந்திருக்கும் மெலோனியுடன் முரண்பட வைத்தது.
பெர்லஸ்கோனியின் 86வது பிறந்தநாளுக்கு, புடின் வாழ்த்துகளையும் ஓட்காவையும் அனுப்பினார். பதிலுக்கு பெர்லுஸ்கோனி லாம்ப்ருஸ்கோவை நன்றி தெரிவித்து திருப்பி அனுப்பினார்.
சில்வியோ பெர்லுஸ்கோனி, ஒரு ஊடக அதிபர் மற்றும் அரசியல்வாதி, அவரது கோமாளித்தனங்களுக்காக நினைவுகூரப்படுவார். 2002 இல், பின்னர் இரண்டாவது முறையாக, அவர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது ஸ்பெயினின் வெளியுறவு மந்திரி ஜோசப் பிக் தலைக்கு பின்னால் தனது பிங்கி மற்றும் ஆள்காட்டி விரலை உயர்த்தினார். இத்தாலியில், அந்த சைகை „கோர்னா“ („கொம்புகள்“) என்று அழைக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டில், பெர்லுஸ்கோனி சார்டினியாவில் உள்ள அவரது வில்லாவில் ஒரு வார இறுதிக்கு அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரை வரவேற்றபோது பந்தனா அணிந்திருந்தார்.
பின்னர், 2008 இல், அவர் பாரிஸில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியின் கழுத்தை நெரித்தது போல் நடித்தார்.