எங்களை ஆக்கிரமிக்க நினைத்தால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் – பெலாரஸ் அதிபர்
தனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய ஒரு அவசியத்தை கடவுள் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடந்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம். ரஷிய அதிபர் புதினை தனது பெலாரஸ் நாட்டில், தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துமாறு தாம்தான் கேட்டுக் கொண்டதாகவும், தனது நாட்டின் மீது தாக்குதலோ, ஆக்கிரமிப்போ நடக்க மிகவும் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இதை செய்ததாகவும், இத்தகைய ஆயுதங்களைக் கொண்ட ஒரு நாட்டை எதிர்த்துப் போராட எந்த நாடும் முன்வராது என்றும், இவை தாக்குதலை தடுக்கும் ஆயுதங்கள் எனக் கூறினார்.
தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவதற்கான திகதியையும் அறிவித்து உள்ளார். இது உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா ஜூலை 7-8 திகதிகளுக்குள் பெலாரசில் மூலோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்தத் தொடங்கும் என்று புதின் கூறினார்.
அதாவது, பெலாரஸின் எல்லைப் பகுதிகளில் ரஷிய அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும், இது உக்ரைனை எந்த நேரத்திலும் அழிக்கலாம். ரஷியாவின் இந்த நடவடிக்கையால், அணு ஆயுதப் போருடன் உலகப் போர் அபாயமும் அதிகரித்து வருகிறது.