டொனால்ட் ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள்
அமெரிக்காவின் அணுசக்தி மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த இரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள்ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
49 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணத்தில், உளவுச் சட்டத்தை மீறுதல், தேசிய பாதுகாப்புத் தகவல்களை அங்கீகரிக்கப்படாத நபர்கள் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2021 ஜனவரி இல் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது, பென்டகன், சிஐஏ, தேசிய பாதுகாப்பு ஏஜென்சி மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளின் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார்.
மேலும் குறித்த ஆவணங்களை புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பின்றி வைத்திருந்தார் என புளோரிடாவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் அவர் மீதான குற்றப்பத்திரிகை, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்காது என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.