இரு ரஷ்ய படை வீரர்களை சிறைப்பிடித்த புடின் எதிர்ப்பு துணை இராணுவக்குழுக்கள்
ரஷ்யாவில் புடினை எதிர்க்கும் உக்ரைனினால் வழிநடத்தப்படும் துணை இராணுவக் குழுக்கள் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள பெல்கோராட்டில் நகருக்குள் புகுந்து ரஷ்யப் படைப் படை வீரர்கள் இருவரை சிறைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
htt
சிறைப்பிடிக்கப்பட்ட இரு படை வீரர்களையும் சந்திக்க பெல்கோராட் ஆளுநருக்கு தைரியம் இல்லை என்றும் அவர்களை உக்ரைனியர்களிடம் ஒப்படைப்போம் என்று துணை இராணுவக்குழுவினர் தெரிவித்தனர்.
இத்தாக்குதலுக்குப் பின்னால் உக்ரைன் உள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இதற்க உக்ரைன் தங்களுக்கும் இந்த நவடிக்கைக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்து வருகிறது.
தற்போது ரஷ்யாவுக்கு ஊடுரு தாக்குதல்களை நடத்தும் இரண்டு குழுக்களான லிபர்ட்டி ஆஃப் ரஷ்யா லெஜியன் (FRL) வெளியிட்டது மற்றும் ரஷ்ய தன்னார்வப் படையுடன் (RDK) செயற்படுகிறது. இவர்களுடன் போலந்தினால் பயிற்களை வழங்கப்பட்ட போலந்து படைவீரர்கள் உள்ளடங்கிய குழுவும் செயற்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ht
ரஷ்ய வீரர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகக் காட்டப்பட்டால் ஆளுநர் கிளாட்கோவ் போராளிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வருதாகக் சொந்த டெலிகிராம் வீடியோவுடன் பதிலளித்தார். அத்துடன் அவர்கள் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தான் நினைத்ததாகக் கூறினார்.
RDK மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் இன்னும் கூடுதலான கைதிகளைக் காட்டுவதாகத் தோன்றுகிறது. அதில் அவர்கள் ஆளுநர் சந்திப்பதற்கு வரத் தவறிவிட்டதாகவும் கூறினர். அத்துடன் பிடிபட்டவர்களை மீட்க இராணுவமோ அல்லது சிவில் தலைமையோ அக்கறை காட்டவில்லை என்று கூறியது.