15 மாத யுத்தத்தின் பாக்முட் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டை 15 மாதகால் கடும் யுத்தத்தின் பின்னர் முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது.
ரஷ்யாவின் தனியார் இராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் தனது துருப்புக்கள் பாக்முட் நகரை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தார். அதற்கான பல காணொளி சான்றுகளையும் வெளியிட்டார்.
கடந்த 15 மாதகாலப் போரில் பாக்முட்டை (சோவியத் ரஷ்யா காலத்துப் பொயர் – ஆர்டியோமோவ்ஸ்க்) ரஷ்யா கைப்பற்றியிருப்பது மிகப் பொிய வெற்றியைப் பிரதிபலிக்கிறது.