ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ரொகெட் வெடித்துச் சிதறியது!
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது.
பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட், அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோதனை ஓட்டமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
வெற்றிகரமாகப் புறப்பட்ட அந்த ராக்கெட்டில் இருந்து மூன்றாவது நிமிடத்தில் திட்டமிட்டபடி பூஸ்டர்கள் பிரிந்து செல்லாததால், நடுவானில் வெடித்துச் சிதறியது.
இந்த நிழக்வைப் பார்வையிட ஆயிரக்கண்கான மக்கள் கூடியிருந்தனர்.