“ஹைபிரிட்” சூரிய கிரகணம்
உலகின் சில பகுதிகளில் மிகவும் அரிதான “ஹைபிரிட்” சூரிய கிரகணத்தைக் இன்றைய தினம் வியாழக்கிழமை கண்டுக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய சூரிய கிரகண நிகழ்வை நாசா தனது யூடியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிப்பரப்புகிறது.
ஹைபிரிட் சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி இன்று காலை 7.06 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணி வரை நீடிக்கும் என்று வானியல் இணையதளம் இன்தி ஸ்கை தெரிவித்துள்ளது.
இது ஒரு கலப்பின (ஹைபிரிட்) கிரகணம் என அழைக்கப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் இதனை பார்க்க முடியாது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த (நிங்கலோ) சூரிய கிரகணத்தை இம்முறை அவுஸ்ரேலியாவில் மட்டுமே சுமார் 60 அல்லது 62 வினாடிகளுக்கு சூரியனை முழுமையாக மறைக்கும் அரிய நிகழ்வை அவதானிக்க முடியும்.