ரஷ்ய போர் விமானம் சொந்த நகரத்தின் மீது தவறுதலாக குண்டு வீசியது
உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள பெல்கோரோட் நகரில் ரஷ்ய போர் விமானம் தவறுதலாக் குண்டு வீசியதால் அப்பகுதியில் மூன்று பேர் காயம் அடைந்தனர் மற்றும் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று பிராந்திய ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.
குண்டு வீசப்பட்ட இடத்தில் 20 மீற்றர் ஆழத்திற்கு குழி காணப்படுகிறது. குடியிருப்பு ஒன்று முற்றாக அழித்துள்ளது.
Su-34 போர் விமானம் தவறுதலாக குண்டை வீசியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெல்கொரோட் – 370,000 மக்கள் வசிக்கும் நகரம் – உக்ரேனிய எல்லையில் இருந்து 25 மைல் (40 கிமீ) தொலைவில் உள்ளது. இது உக்ரைனின் இரண்டாவது நகரமான கார்கிவ் நகருக்கு வடக்கே அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு நடத்தியதில் இருந்து அங்குள்ள மக்கள் உக்ரேனிய ஷெல் தாக்குதலுக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர்.
ரஷ்ய போர் விமானங்களும் உக்ரைனுக்கு செல்லும் வழியில் நகரத்தின் மீது தவறாமல் பறக்கின்றன.