November 22, 2024

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது என யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ. ஆனோர்ல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோர்ல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (மணிவண்ணன் அணி) யின் மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் தொடுத்துள்ள உறுதிகேள் எழுத்தாணை (Writ of Certiorari), யாதுரிமை எழுத்தாணை (quo warranto) மற்றும் ஆணையீட்டு எழுத்தாணைக்கான ( Writ of Mandamus) மனு மீதான விசாரணை இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, வழக்கு தொடுநர் தரப்பினரால் சமர்ப்பணங்கள் முன் வைக்கப்பட்டன. எதிர் மனுதாரர்களில் ஒருவரான உள்ளூராட்சி ஆணையார் சார்பில் மன்றில் தோன்றிய அரச தரப்பு சட்டத்தரணி தனக்கு கால அவகாசம் வேண்டும் என கோரியதை அடுத்து,  வழக்கினை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert