Mai 20, 2024

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி:அகழ்வு தொடர்கிறது

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏழாவது நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.அகழ்வாய்வின் போது ஆறு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று ஏழாவது நாள் தொடர்சியாக அகழ்வுப் பணிகள் நடைபெற்றிருந்தது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஏழாவது நாள் அகழ்வாய்வுகள் இன்று (13) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் காவல்துறையினர், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஸ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதுவரை துப்பாக்கிச் சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்கத் தகடு, உடைகள், கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை 

அகழ்வுப் பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் ஒன்றன் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னிப் பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert