Mai 20, 2024

ரணில் ஆப்பு இறக்குகிறார்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக ராஜபக்சக்களது அரசியலை தூக்கியடிக்க ரணில் தயாராகியுள்ளார்.நாடாளுமன்ற தெரிவுக்குழு,ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான விசாரணையென ராஜபக்ச தரப்புக்களிற்கு தன்னை தவிர மாற்றில்லையென காண்பிக்க ரணில் மும்முரமாகியுள்ளார்.

இதனிடையே  ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், அந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் சேனல் 4 விடுத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert