Mai 20, 2024

டக்ளஸிடம் சீனாவும் கேட்கிறது!


இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை சீன நாட்டு முதலீட்டாளர்கள் குழுவினர் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியுள்ளனர்.

இலங்கையில் தாம் கடற்றொழில் துறையில் முதலீடுகளைச் செய்வதற்கும், தமது படகுகளைக் கொண்டு பிடிக்கும் மீன்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமக்கான அனுமதிகளை கடற்றொழில் அமைச்சு வழங்குமாக இருந்தால் அத்துறையில் பாரிய முதலீடுகளை செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் சீன முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடலட்டை பண்ணைகளில் சீன முதலீட்டுகளிற்கான காரணகர்த்தாவாக டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டிருந்தது.

இந்நிலையில் சீன முதலீட்டாளர்கள் இலங்கை கடலில் தொழில் முயற்சிக்கான தமது திட்டவரைபை தமக்கு கிடைக்கச்செய்தால் அதுதொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த மற்றும் அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert