Mai 13, 2024

தமிழ் மக்கள் இயக்கத்தின் அறிக்கையும்செயல்பாடும் !

தமிழீழ தேசிய மாவீரர் நாள், தமிழீழ இனப்படுகொலை மே18 அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள், தொண்டர்களின் வரம்பு மீறிய செயற்பாடுகள், தியாகத் தீபம் திலீபன் அண்ணா வின் நினைவேந்தல் விடயங்களில் அரசியல் தலையீடுகள், மற்றும் அன்பைக் கால தியாகி அன்னை பூபதி அம்மாவின் நினைவேந்தல் விடயங்களில் அரசியல் விளம்பர வாக்கு வாதங்கள் போன்ற
கடந்த கால பட்டறிவு பாடத்தின் அடிப்படையில்

2023 ஆண்டு குழப்பங்கள் மற்றும் வீண் முரண்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு

மே18 ஈழத் தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள், அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் தவிர்க்க பட வேண்டும்.

பொதுகட்டமைப்பு கூட்டப் பட்டு
மாவீரர்,தேசபற்றாளர், மாமனிதர், பெற்றோர்கள் அல்லது உறவினர்கள். முன்னாள் போராளிகள், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சர்வமத தலைமைகள், சிவில் சமூகத்தின் பிரதிகளும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 8 மாவட்ட தலைவிகள் உள்ளடக்க பட்ட நிரந்தர கட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்க பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள் தயவுசெய்து பின்புலத்தில் இருந்து ஜனநாயக வழியில் ஆதரவு வழங்க வேண்டும்.

அரசியல் வாதிகள் மேற்படி நினைவேந்தல் விடயங்களில் பாதுகாப்பு கவசமாக இருந்து உணர்வு பூர்வமாக வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேற்படி நிர்வாக கட்டமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் அரசியல் பின்புலம் அற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
குறித்த நினைவேந்தல் கட்டமைப்பின் தேவையை
தமிழ் மக்கள் இயக்கம்
வலியுறுத்தி நிற்கின்றது.
இது தொடர்பாக ஊடக சந்திப்பு இன்று மாலை. 5:00 மணிக்கு புத்தளம் தமிழ் மக்கள் இயக்கத்தின் மக்கள் பணிமனையில் நடத்த உத்தேசித்து உள்ளோம். தொடர்பு கொள்ளவும் +94779919647
நன்றி

செல்வநாயகம் நேசன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் மக்கள் இயக்கம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert