April 27, 2024

காணி விடுவித்தது டெலோவே!

வலிகாமம் வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன உரிமை கோரியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலே அனைத்து ஜனாதிபதி வேட்பாளரிடமும் நாம் பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் அவரை நேரடியாக சந்தித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி சகல கட்சிகளையும் அழைத்த பொழுதும் நாம் அதில் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம்.அதற்கு பிரதானமானது காணி விடுவிப்பு கோரிக்கை.அதை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முன் வந்துள்ளார் எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன தெரிவித்துள்ளார்.

ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகள் மிகக்குறைவானவை.இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுவிக்கப்பட இருக்கின்றன.  இது மாத்திரம் போதாது.மற்ற காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு எனவும் குருசாமி சுரேந்திரன தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகிய போது தமிழ் தேசியக்கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவளித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert