Oktober 7, 2024

உயிர் கொல்லி வைரஸால் இறப்புக்களில் உச்சத்தை தொடும் பிரித்தானியா

உயிர் கொல்லி வைரஸால் இறப்புக்களில் உச்சத்தை தொடும் பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 621 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பிரித்தானியாவின் மொத்த மரணங்கள் 28,131 ஆக உயர்ந்துள்ளன.

குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த 24 மணித்தியால இறப்புகளில் 3 ஆவது நாளாகவும் பிரித்தானியா உச்சத்தை தொட்டுள்ளது.

ஸ்பெயின் 276 இறப்புகளையும், இத்தாலி 474 இறப்புகளையும், பிரான்ஸ் 166 இறப்புகளையும், பதிவு செய்துள்ள நிலையில் உலக அளவில் அமெரிக்காவின் 887 என்ற உச்ச இறப்புக்கு அடுத்த நிலையில் பிரித்தானியாவின் இறப்புகள் பதிவாகி உள்ளன.

அத்துடன் இத்தாலியின் இறப்புகளோடு மிக நெருக்கமான எண்ணிக்கையை பிரித்தானியா எட்டியுள்ளது.இந்த நிலையில், புதிதாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்ட 4,806 பேருடன், தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 182,260 ஆக உயர்ந்துள்ளது.