November 23, 2024

எனது மரணத்தை அறிவிக்க திட்டமிட்டனர்

தான் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது தனது இறப்பை அறிவிக்கும் திட்டத்தை வைத்தியர்கள் தயார் செய்து வைத்திருந்தனர் என்று பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பெரிவித்துள்ளார்.
பபொரிஸ் ஜோன்சன் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்தார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நாட்கள் குறித்து ‛த சன்’ ஊடகத்திற்கு பொரிஸ் ஜோன்சன் அளித்துள்ள பேட்டியில்,
நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கடினமான தருணம். நான் அதை எப்போதும் மறுக்கமாட்டேன். அப்போது நான் அவ்வளவு சுயநினைவுடன் இல்லை, ஆனால் என்னைக் காப்பாற்ற தற்செயலான திட்டங்கள் மட்டுமே வைத்தியர்களிடம் இருந்தன.
அவர்கள் எனக்கு ஒரு முகமூடியைப் பொருத்தி, அதன் மூலம் ஒக்சிஜன் ஏற்றினர். என் மூக்கு செயல்படும் தன்மையை இழந்தது. அந்த நேரத்தில் நான் இறந்துவிட்டால் அதை எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் வைத்தியர்கள் தயார் செய்து வைத்திருந்தனர்.
ஒரு சில நாட்களில் எனது உடல்நிலை இன்னும் மோசமடைந்ததால், இனி பிழைக்கப்போவதில்லை என்று நினைத்தேன். வைத்தியர்களும் தாதியரும் மிகவும் கடுமையாகப் போராடி என் உயிரை மீட்டுக்கொண்டுவந்தனர்.
அவர்களின் அற்புதமான செயலால்தான் நான் மீண்டு வந்தேன். எனவே, அவர்களுக்கு எப்போதும் நன்றி உணர்வுடன் இருப்பேன் – என்றார்.