Mai 1, 2024

யேர்மனியில் டெஸ்லா உற்பத்தியை நிறுத்தியது: தீ வைப்புக்கு உரிய கோரியது வலது சாரிக் குழு

யேர்மனியில் மின்சார மகிழுந்தை உற்பத்தி செய்யும் டெஸ்லா தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரம் வழங்கும் மின்கம்பிகள் தீவிர வலது சாரி குழுவால் தீயிட்டு எரியூட்டப்பட்டதால் டெஸ்லா அதன் ஜெர்மன் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

டெஸ்லா ஆலைக்கு அருகில் பெர்லினின் தென்கிழக்கில் மின்சாரக் கம்பம் எரிந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, செவ்வாய்கிழமை அதிகாலை அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

தீ அணைக்கப்பட்டது, ஆனால் மின்சாரக் கட்பிகளில் ஏற்பட்ட சேதத்தால் பிராண்டன்பர்க் மாநிலத்தில் அமைந்துள்ள மின்சார மழுந்துத் தொழிற்சாலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான தீ வைப்பு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Vulkangruppe (எரிமலை குழு) இன் தீவிர இடதுசாரி ஆர்வலர்கள் இந்த செயலுக்கு பொறுப்பேற்றனர்.

எங்கள் மின்சார உள்கட்டமைப்பின் மீதான தீ வைப்பு துரோகத் தாக்குதலாகும் என்று பிராண்டன்பேர்க்கின் உள்துறை மந்திரி மைக்கேல் ஸ்டூப்ஜென் கூறினார்.

ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களின் அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டு ஆபத்தில் சிக்கியுள்ளனர். இத்தகைய நாசகார செயலுக்கு சட்டத்தின் ஆட்சி மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும்.

பேர்லினில் உள்ள எலோன் மஸ்க்கின் டெஸ்லா மகிழுந்து தொழிற்சாலையில் தீவைத்து எரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கு „அதிகார எதிர்ப்பு“ குழு பொறுப்பேற்றுள்ளது.

மாற்று ஊடக இணையதளமான கான்ட்ராபோலிஸில் 2,500 வார்த்தைகள் கொண்ட திறந்த கடிதத்தை வெளியிட்ட ‚எரிமலை குழு‘ தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என்று கூறியது.

டெஸ்லாவின் ஜிகாஃபாக்டரி அதன் தீவிர சுரண்டல் நிலைமைகளுக்கு பெயர் பெற்றது என்று கூறிய குழு, இந்த தாக்குதல் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கும் பரிசு என்ற கூறியது.

இந்த சம்பவத்தை அடுத்து உற்பத்தியை நிறுத்துவதாக எலான் மஸ்க்கின் அறிவிப்பை அடுத்து ஐரோப்பிய பங்குச் சந்தையில் டெஸ்லாவின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert