April 28, 2024

தமிழீழத்தில் நடைபெற்ற தமிழ் வேந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த  ஜோதி என்கிற  தமிழ் வேந்தன்அவர்களின்  15 வது  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு .  

தமிழின அழிப்பை நிறுத்தக் கோரி  தமிழ்நாடு , கடலூரில் தீக்குளித்து உயிர்நீத்த தமிழ் வேந்தனின் நினைவேந்தல் நிகழ்வு நாள் இன்று (18.02.2024 )  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமைக்காரியலயத்தில்     நடைபெற்றது 

தமிழ்நாடு கடலூரை  சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் 2009, பெப்ரவரி 18அன்று மதியம் 2.30 மணியளவில் கடலூர்   நீதிமன்ற அலுவலகத்துக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடியே தீக்குளித்தார்.கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தமிழ் வேந்தன். உயிருக்கு போராடி வந்த  நிலையில் கொடுத்த வாக்குமூலத்தில் தமிழ் வேந்தன், “ ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அதிகம் படிக்காதவன். படித்தவர்கள் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காக போராடுங்கள் என்று கூறினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert