April 27, 2024

பிரித்தானியாவில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளிகள் நினைவெழுச்சிநாள்

லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப் பேரொளி ராஜா, ஈகைப் பேரொளி இரவி, ஈகைப் பேரொளி இரவிச்சந்திரன், ஈகைப் பேரொளி அமரேசன், ஈகைப் பேரொளி முருகதாசன், ஈகைப்பேரொளி சோதி (எ) தமிழ்வேந்தன், ஈகைப் பேரொளி சிவபிரகாசம், ஈகைப் பேரொளி கோகுல இரத்தினம், ஈகைப் பேரொளி சீனிவாசன், ஈகைப் பேரொளி சதாசிவம் சிறீதர், ஈகைப் பேரொளி ஆனந்த், ஈகைப் பேரொளி இராஜசேகர், ஈகைப் பேரொளி பாலசுந்தரம், ஈகைப் பேரொளி மாரிமுத்து, ஈகைப் பேரொளி சிவானந்தன், ஈகைப்பேரொளி சுப்பிரமணியன், , ஈகைப் பேரொளி கிருஷ்ணமூர்த்தி, , ஈகைப் பேரொளி தழல் ஈகிசெங்கொடி, ஈகைப் பேரொளி விஜயராஜ், , ஈகைப் பேரொளி விக்ரம், ஈகைப் பேரொளி மணி, ஈகைப்பேரொளி செந்தில்குமரன் ஆகியோரின் நினைவு சுமந்து நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 

இன்றய நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு வடமேற்குபிராந்திய நிர்வாக பொறுப்பாளர் திரு செல்வன் அவர்கள் பொது சுடரினை ஏற்றிவைத்தார் . தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு வடமேற்குபிராந்திய விளையாட்டுத் துறைபொறுப்பாளர் திரு தனபாலன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். ஈகைசுடரினை மற்றும் திரு உருவப்படத்திற்க்கான மலர் மாலையினை ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய பெற்றோர்கள் திரு திருமதி வர்ணகுலசிங்கம் அவர்கள் அணிவித்தார்கள். மலர்வணக்கம் சுடர் வணக்கத்தினை தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில்இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 15 ம் வருடங்கள் ஆகின்றன. இவர், 7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்றதலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார் இலங்கையின் உள்நாட்டுப் போரைஎல்லோரினதும் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள்சபையின் முன்றலில் 2009, பெப்ரவரி 12 தீக்குளித்து மரணமடைந்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert