வங்குரோத்தினாலேயே பேச்சு!
உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் தற்போதைய பொருளாதார நிலைமையை சமாளிக்க முடியும் என்ற யதார்த்தம் காரணமாகவே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.இதுவே தமிழ் மக்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வலுவான நிலையை உருவாக்கியுள்ளதென வடகிழக்கு சிவில் அமைப்புக்களது ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசத்திற்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. 2023 பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் மோதலுக்கான தீர்வு காணப்படும் என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சில தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களுடன் தமது நிலைப்பாடு தொடர்பில் எவ்வித முன் உடன்பாடு அல்லது இணக்கப்பாடு இன்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இன்று பாரிய பொருளாதாரப் பேரழிவில் சிக்கியுள்ளது. சிங்க பௌத்த மேலாதிக்கத்தின் எதிரியாக ஏனைய தேசங்களை குறிப்பாக தமிழ் தேசத்தை எண்ணி கடந்த எட்டு தசாப்தங்களாக இலங்கை மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவு இதுவாகும். சிங்கள தேசத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இந்த உண்மையை இன்றுவரை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை அறிவாளிகளோ, மக்களோ வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
பேச்சுவார்த்தையின் ஒரு பக்கமாக இலங்கை என்ற செயற்கையான ஒற்றை தேசத்தில் அனைவரின் அடையாளத்தையும் கலைத்து, தமிழ் தேசத்தை இனத்தின் மூலம் அழித்து அதன் இருப்பையும் அடையாளத்தையும் அழிக்கும் வேலையில் ஈடுபடுகின்றது சிங்கள தேசம். மறுபுறம், தீவின் வடக்கு கிழக்கை தனது பாரம்பரிய தாயகமாகக் கொண்ட அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தன்னை ஒரு தேசமாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியம், தொடர்ந்து அரசியல் ரீதியாக போராடி, தனது பாதுகாப்பிற்காக வீரமும் தியாகமும் நிறைந்த விடுதலைப் போரையும் நடத்தியது. ஒரு தேசம் என்ற அடையாளம், மற்றும் இந்த காரணத்திற்காக எப்போதும் தேர்தல்களில் அதன் கட்டளைகளை மீண்டும் மீண்டும் வழங்கியதென்பதையும் சிவில் அமைப்புக்களது ஒன்றியம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.