November 21, 2024

சம்பந்தனின் நடவடிக்கை தமிழர் தரப்பை பலவீனப்படுத்தும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

சிங்கள பேரினவாத அரசாங்கம் மிகவும் பலவீனம் அடைந்து சர்வதேச உதவிகள் தடைப்பட்டு அதனை பெற்றுக் கொள்ள தமிழர் தரப்பை எப்படி கையாள முடியும் என்று பலவிதமான அனுதாப அறிக்கைகளை ஆட்சித் தரப்பு தமிழர்கள் மீது வெளிப்படுத்தும் சூழ்நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கை தமிழர்களின் பேரம் பேசும் பலத்தை பலவீனப் படுத்துவதாகவே உள்ளது என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தமிழ் தேசிய தலைமைகள் இணைந்து ரணிலின் அழைப்பில் கடந்த 13 திகதி சந்தித்த போது கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஐனவரி 31 திகதி வரை காலக்கெடு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர் அதற்கான நல்லெண்ண வெளிப்பாடு முறைப்படி அரசாங்கத்தால் கிடைப்பதற்கு முன்பாக தாங்களாக வலிந்து சந்திக்க சம்பந்தன் சுமந்திரன் சென்றமை ரணில் அரசாங்கத்தை காப்பாற்றி தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதாகவே உள்ளது.

தமிழர் தரப்பு இந்தியாவின் மேற்பார்வையில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்னெடுக்க வேண்டும் என உறுதியாக இருப்பதை ரணில் அரசாங்கம் விரும்பவில்லை காரணம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்று நாடகத்தை கடந்த காலங்கள் போல நிகழ்த்த முடியாது இதனால் எரிச்சொல்ஹெம் ஊடாக உள் நாட்டுக்குள் அரசாங்கத்துடன் பேசி தீர்வு காண்பது தான் உறுதியான தீர்வு என சம்பந்தன் சுமநதிரன் ஊடாக டீலினை முன்னகர்த்தி சம்பந்தனையும் சுமந்திரனையும் சந்திக்க வைத்தார் ஆனால் இந்த சந்திப்பை ஏனைய தமிழ்க் கட்சிகள் நிராகரித்து ரணிலுக்கு கடிதம் எழுதியமையால் ஐனாதிபதி செயலகம் இந்த சந்திப்பு உத்தியோக பூர்வமானது இல்லை என அறிவித்துள்ளது

ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் தமிழர் தரப்பையும் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலத்தையும் பலவீனப்படுத்துவதாகவே அமையும் மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூறலில் இருந்தும் தீர்வு வழங்குவதில் இருந்தும் கடந்த காலங்களைப் போல தப்பிக்க வழி திறக்கும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert