இந்தியாவில் ஈழத்தமிழர்களின் உரிமை சார் அரசியல் பிரச்சனையை மக்கள் மயமாக்கம் செய்யவேண்டிய சூழ்நி காணப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டங்கள் நடாத்தி எமது இன்றைய நிலைப்பாட்டினை ஈழத்தமிழர்களின் உரிமை சார் அரசியல் பிரச்சனையை இந்திய மக்கள் மயமாக்கம் செய்யவேண்டிய சூழ்நிலையே இங்கே காணப்படுகின்றது.
இப்போது ஈழத்தமிழர்களாகிய உங்களுக்கு ஒரு சந்தேகம் எழும் அதாவது இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் எமது நிலைப்பாடு தெரியாதா? எனவும் புதிதாக இந்தப் பெண்மணி என்ன செய்யப்போகின்றார்? எனவும் தோன்றும். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள இந்திய தமிழரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை பேசிட மாட்டார்களா எனவும் தோன்றும்.
இப்போது நாம் ஒரு உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்திய தமிழரசியல்வாதிகளைப் பொறுத்தவரையிலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரச்சனைகளைப் பற்றிப் பேசிடவும், அந்தந்த காலத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டிற்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவுமே தொடர்ச்சியாக அரசியல் கூட்டங்களை நடத்தியவண்ணம் உள்ளனர். அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சினையை தொடர்ச்சியாக பேசிட அதற்கான நேரமும் இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது. இதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மீது பழியை போடுவதும் ஏற்புடைய செயலல்ல.
அவரவர் அவரவர் நலன்களுக்குத்தான் அதிகளவு முக்கியத்துவத்தை அளிப்பார்கள் என்பதுவே நிதர்சனமாகும்.
ஈழத்தமிழர்களாகிய நாங்கள் புலம்பெயர்ந்து அமெரிக்க, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகளில் ஆகக்குறைந்தது 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றோம். 2009 ஆண்டு
ஈழத்தமிழர்களின் மீதான இனவழிப்பு யுத்தத்தின் போது உலக நாடுகள் ஒவ்வொன்றினதும் நாடாளுமன்றங்களின் முன்பு ஆகக் குறைந்தது 60 நாட்களுக்கும் மேலாக ஒன்று கூடி நின்று தொடர்போராட்டங்களைச் செய்திருந்தோம்.
அன்றைய நாளில் அமெரிக்கா தொடக்கம் அவுஸ்திரேலியா வரையிலும் உள்ள ஊடகங்களை எமது பக்கமாகவ திருப்பியும் இருந்தோம். அதுமட்டுமன்றி 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை பற்றியும் இனவழிப்புப் பற்றியும் ஈழத்தமிழர்களாகிய நாமே முன்னின்று எமது வலிகளை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் சபைகள், உலக நாடுகளில் அந்த அந்த நாட்டு நாடாளுமன்றங்களில் நின்று தொடர்ச்சியாக பேசியும் வருகின்றோம்.
ஆனாலும் இன்றுவரை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களைத் தவிர மற்றைய மக்களிடம் ஈழத்தமிழர்களின் அரசியல் சார் உரிமைப் பிரச்சனையானது பெரும்பான்மையாக எடுத்துச் செல்லப்படவில்லை என்பதே உண்மையாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரையிலும் ஈழத்தமிழர்களால் இந்திய அரசின் நாடாளுமன்றத்தில் வாதமாக ஈழத்தமிழர்களின் பிரச்சனையானது பேசப்படவில்லை. அதுமட்டுமன்றி
இந்தியாவில் வாழும் மக்களைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களின் உரிமைகள் சார் அரசியல்போராட்டமானது தவறான முறையில் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. இதனையே இந்திய மக்களும் நம்புகின்றனர்.
உலகில் இரண்டாவது மிகப்பெரிய சனத்தொகையைக் கொண்ட நாடாக உள்ள இந்தியா, சனநாயக தேர்தல் அரசியலை கடந்த 75 ஆண்டு காலமாக முன்னெடுத்துச் செல்லும் நாடாக உள்ளது.
இந்த இந்தியா நாட்டில் வாழுகின்ற பெரும்பாலான மக்களுக்கு ஈழத்தமிழர்களின் உரிமை சார் அரசியல் பிரச்சனை பற்றிய தவறான புரிந்துணர்வு உள்ளதால், இந்திய அரசானது, ஈழத்தமிழர்கள் தொடர்பில் எடுக்கின்ற தவறான முடிவுகளில் தாக்கத்தை செலுத்தாமல் உள்ளது.
ஈழத்தமிழர்களே இந்திய நாட்டின் பாதுகாப்புக் கவசமாக உள்ளார்கள் என்ற உண்மையானது இந்திய மக்களுக்கு தெரியாதவரை ஈழத்தமிழர்கள் மீது இந்திய மக்கள் அக்கறையற்றவர்களாகவே காணப்படுவர்.
இத்தகைய இந்திய மக்களின் அக்கறையற்ற தன்மையே ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்டு இனவழிப்பிற்க்கு உள்ளாக்கப்படவும் அழிக்கப்படவும் காரணமாக உள்ளது.
ஈழத்தமிழர்களின் தாயக பிரதேசத்திற்கு(தமிழீழத்திற்கு) அருகே உள்ள பிராந்தியத்தில் (இந்தியாவில்) வாழுகின்ற மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஈழத்தமிழர்களின் மீதான இனவழிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்ற போது, உலகில் உள்ள மற்றைய நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களரல்லாத மக்களும் ஈழத்தமிழர்களின் மீதான இனவழிப்புப்பிரச்சனை பற்றியும் இதர பிரச்சனைகள் பற்றியும் அலட்டிக்கொள்ளப் போவதில்லை.
இத்தகைய இந்தச் சூழ்நிலையை ஈழத்தமிழர்களாகிய நாம் சரியாக புரிந்துகொண்டு, ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமையைப் பற்றியும் ,ஈழத்தமிழர் களின் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தம் பற்றியும் பூரண தெளிவை இந்தியாவில் உள்ள
ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டங்களை நடாத்தி தெளிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம்.
இந்திய மாநிலங்களில் கூட்டங்களை நடத்துவதற்கு பாரிய நிதி ஒதுக்கீடு தேவைப்படுகின்றது…
இதனை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஒவ்வொரும் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களாகிய, நீங்கள், நாங்கள் ஒவ்வொருவரும் மாதாந்தம் முடிந்த நிதிப்பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும்.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் மாதாந்தம் ஒருவர் 10 பவுண்ட்ஸ் அல்லது 10 டொலர்களை செலுத்தினால் ஆகக்குறைவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் 1000பேரை மாதாந்தம் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்தால் தொடர்ந்து இரண்டு வருடங்கள் உதவியைச் செய்தால் நிச்சயமாக எம்மால் அடுத்த கட்டத்தை நோக்கி எமது போராட்டத்தை நகர்த்த முடியும்.
அன்பான புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே! உங்களால் முடிந்த தாராள உதவியை வழங்குங்கள்…
என்றும் அன்புடன்
நிலா
19/12/2022
8.38
இந்தியா.