நீதியின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத காணி அபகரிப்பாளர்கள்(சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானம்)
சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்துக்கு அருகில் திறந்த வெளியாக இருந்த அரச உடமை காணி அபகரித்து விற்றோரால் ஏற்பட்ட நிலையாவும் நீங்கள் அறிந்ததே.
இதை அபகரித்தோர்கள் நீதி அற்ற முறையில் பல விதமான அடா வடித் தன்மையால் சிறை சென்றும் வந்ததும் அத்தோடு மல்லாகம் நீதி மன்றில் இதற்கான வழக்கு தொடரப்பட்டு அதற் குரியவர்கள் மயானத்தை பயன்படுத்த நீதிமன்றின் தீர்ப்பும் வழங்கப்பட்ட நிலையில் அந்த மயாணப் பலனாளர்கள்
இறந்தவர் சடலத்தை எரிக்க எடுத்துச் சென்ற வேளை மீண்டும் காணி அகபரிப்புக்காறர்களால் கலவரம் ஏற்படுத்தப்பட்டு நடு வீதியில் பிணம் இறக்கி வைக்கப்பட்டு பின் தற்காலிகமாக நீதி பதியின் கருத்துக்கு இனங்கி வேறு இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
அதன் பின் பல முறை முயற்ச்சி செய்தும் கலகக்காறர்களின் அடாவடித்தனத்தால் நீதிக்கும், கௌரவத்துக்கும் ,கட்டுப்பட்ட பயன் பாட்டாளர்கள் பெறுமை காத்தனர்.
மீண்டும் பலர் இறந்த போதும் கலவரக்காறர்களின் அடாவடியால் பினங்களை அங்கே தகனம் செய்ய முடியாத நிலையா உள்ளது
இதற்கான நீதி வழங்கி நீதவான் இன் நிலைக்கு ஓர் தகுந்த முடிவெடுத்து நல்ல தீர்வு கிடைக்கும் என்று காத்திருக்கும் பயன் பாட்டாளர்கள் நீதியின் பக்கத்தையும் தர்மத்தின் நிலைப்பாட்டையும் எதிர்பார்க்கின்றனர்
முக்கி தகவலாக இக்காணியை அபகரித்து விற்பனை செய்தவர்களிடமே கலகக்காறர்கள்
கேள்வி கேட்கவும் அதற்கான தீர்வை காணவும் முடியும்!
இருந்த மாணத்துக்கு அருகில் காணி வாங்கும் போது சிந்திக்காத கலககாறர்கள் இப்போது உரியை கேட்பதும்
உடையவர்களை வெருட்டுவதும் இலங்கை நீதித்துறைக்கு விடும் சவாலாக மக்கள் கருதுகின்றார்கள் !
தகவல் ஈழவன்