கப்பலில் மீட்கப்பட்டவர்கள் வியற்நாமில்: 76 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்!
சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாகவும், படகில் ஏறுவதற்கு முன் ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.
எனினும், விபத்துக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து 1800 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வுங் தாவோ துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்கள் பதற்றமற்றவர்களாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர்களிற்கான தங்குமிடம் உணவு போன்றவற்றை அரசாங்கம் மிகவும் கௌரவமான விதத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
முன்னதாக நவம்பர் 8 ம் திகதி இரவும் 9 ம் திகதி அதிகாலையும் இலங்கையர்களை அதிகாரிகள் கரைக்கு கொண்டுவந்து மூன்று இடங்களில்Vung Tau city, district. Xuyen Moc and Dat Do அவர்களை தங்கவைத்துள்ளதுடன் உணவு அடிப்படை வசதிகளை வழங்கியுள்ளனர்.
அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர் பதற்றமின்றி காணப்படுகின்றனர் சிலர் சிகரெட் கூட வாங்கினார்கள் நூறிற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளனர்.