தென்பகுதியில் இருந்தே வருகின்றது:சுரேஸ்
கடற்படைக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, இராணுவத்திற்கென தனியான புலனாய்வுப் பிரிவு,பொலிஸ் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடைப் புலனாய்வு பிரிவு என பல்வேறு புலனாய்வு பிரிவினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரவலாக நிறைந்து போயிருக்க போதைப்பொருள் இங்கு வருகின்றது என்றால் புலனாய்வு பிரிவினர் என்ன செய்கின்றார்கள் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனை என்பது யுத்தத்துக்கு பின்னரே அறிமுகமானது. இன்றுவரையும் யாழ்ப்பாணம் முப்படையினுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. இங்கு யார் என்ன செய்தாலும் படையினருக்கு உடனடியாகவே தகவல்கள் தெரியும்.
மஞ்சள் கடத்தப்படும் போது உடனடியாக பிடிக்கப்படுகின்றது. வேறு பொருட்கள் வரும்போது உடனடியாக கடத்தல் குழு பிடிக்கப்படுகிறது. ஆனால் போதை வஸ்து வரும் போது அவ்வாறான நிலை காணப்படுவதில்லை.
கஞ்சா வரும்போது 200 கிலோ 300 கிலோ பிடிபடும்போது அதே நேரத்தில் வெளிப்பிரதேசத்தில் பெருந்தொகை கஞ்சா வருவதாக அறியப்படுகிறது.
கடற்படையினர் இந்திய மீனவர்கள் வரக்கூடாது என்பதற்காக பல ரோந்து நடவடிக்கையை ஈடுபட்டிருக்கின்றனர். இந்திய மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.இலங்கை கடற்படை திறமையாக செயல்படும்போது கேரள கஞ்சாவை இங்கு தடை செய்ய முடிவது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல.