இலங்கையில் தமிழ் மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் உள்ள பாடசாலைக் குழந்தைகள் பெருமளமானவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதிலும் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இருந்து மாணவர்கள் அதிகமாக இடை விலகுகின்றனர்.
பொருளாதார நெருக்கடி மற்றும் சமூகத்தில் எழுந்துள்ள பாரிய பிரச்சினை காரணமாக இவர்கள் பாடசாலையை விட்டு விலகுகின்றனர்.
பெற்றோருக்கு மற்றும் சமூகத்துக்கு கட்டுப்படாத ,நடத்தை கோலத்தை இவர்கள் காட்டுகின்றனர் என பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.எமக்கு பொருளாதார நெருக்கடி ஒன்றும் புதிதல்ல. எம்மில் பலர் அதிலிருந்து மீண்டு இன்று உயரிய நிலையில் இருக்கின்றனர். அவர்களை நாம் உதாரண மனிதர்களாக நாம் கூறி இருக்கின்றோம்.ஆகவே பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆன்மீகப் பெரியார்கள், கல்வியாளர்கள் இந்த மாணவச் சமூகத்தை மீட்டெடுக்க முன் வர வேண்டும். காரணம் கல்வி அறிவு அற்ற, படிப்பு அறிவு அற்ற சமூகம் ஒன்று உருவாகிவிடக் கூடாது. தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தாலும், கல்வி அறிவில் உயர்ந்தே நிற்கின்றனர்.
புலம்பெயர் தேசத்தில் வாழும் எம்மவர்களின் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து நிற்கின்றனர். ஆகவே எமது நாட்டில் வாழும் மாணவச் செல்வங்கள் கல்வியை இழக்கக் கூடாது. ஆகவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை நல்லவர்களாக வளர்த்தெடுங்கள்.
உங்களுக்கு முடியாவிட்டால் எம்மை நாடுங்கள். பல மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உயிர் இழக்கின்றனர். பல மாணவர்கள் ,பெண்கள் உட்பட போதைக்கு அடிமையாகி உள்ளனர். ஆகவே நாம் மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.