சீமானை சந்தித்த சிறீதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழகத்தில் நாம் தலைவர் கட்சியின் தலைவர் சீமானை அவரது இல்லத்தில் நேற்று (17) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


சிறீதரன் தமிழகத்துக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.