November 22, 2024

கோணேசர் கோயில் விவகாரத்தில் சர்வமத தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்?வ-மா- மு- உறுப்பினர் சபா குகதாஸ்

கோணேசர் கோயில் விவகாரத்தில் சர்வமத தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்?

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

இலங்கையில் புராதன பஞ்ச ஈச்சரங்களில் பாடல் பெற்ற தலம் திருமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் சிவாலயம் எல்லோரும் அறிந்த வரலாற்றுப் பெருமைகளை கொண்டது இவ்வாறு இருக்கையில் திட்டமிட்டு இலங்கை அரசாங்கம் அதன் வரலாற்றை மாற்றியமைக்க மேற் கொள்ளும் முயற்சியை தடுக்க சர்வமத தலைவர்கள் தலையிடாமல் இருப்பது ஏன்? மௌனம் காப்பது நல்லதல்ல என சைவ மக்கள் வேதனைப் படுகின்றனர்.

கோணேசர் கோயில் வளாகத்தில் கடைகள் அமைக்கும் வேலைத்திட்டம் விரிவடைந்து கடலை நோக்கி அமைந்துள்ள கோவிற் பகுதியின் கீழ் உள்ள கடற்பகுதியை ஆய்வு என்ற போர்வையில் அகழ்ந்து எடுப்பதற்கு தொல்லியல் திணைக்களம் முயற்சிக்கின்றது இது திட்டமிட்ட சதி நடவடிக்கையாக அரச பின்புலத்தில் நிகழ்த்தப்படுகின்றது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் இன மற்றும் மத அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதுவே ஐனநாயகம் இதனை மாற்றியமைக்கும் ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்த சர்வமத தலைவர்கள் முன் வர வேண்டும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert