இந்தோனேசியா: கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட மோதலில் 125 பேர் பலி!!
இந்தோனேஷிய கால்பந்து போட்டியில் கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதி விசில் முடிந்ததும் ரசிகர்கள் ஆடுகளத்தை நோக்கி ஓடுவதை காணொளிகள் காட்டுகின்றன.
பின்னர் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது கூட்ட நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல் நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது என்று கிழக்கு ஜாவாவில் உள்ள காவல்துறை தலைவர் நிகோ அஃபின்டா கூறினார்.
உயிரிழந்தவர்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முப்பத்தி நான்கு பேர் மைதானத்திற்குள் இறந்தனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் இறந்தனர் என திரு அஃபிந்தா கூறினார்.
இந்தோனேசிய கால்பந்து சங்கம் (பிஎஸ்எஸ்ஐ) விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியது, இந்த சம்பவம் இந்தோனேசிய கால்பந்தின் முகத்தை களங்கப்படுத்தியது என்று கூறியது.
டாப் லீக் BRI லிகா 1 ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.